January 25, 2017
tamilsamayam.com
சேவாக், தோனியை பிடிக்காத இந்திய கிரிக்கெட் ரசிகர்களே இருக்க மாட்டார்கள் எனலாம். சேவாக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டுவிட்டர் மூலம் ரசிகர்களுடன் இணைந்துள்ளார்.
அதேபோல தோனி கேப்டனிலிருந்து இறங்கினாலும், அணிக்கும், கோலிக்கும் பக்கபலமாக உள்ளார். தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து இறங்கியது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை பேச வைத்தது.
இந்நிலையில் அதிரடி வீரர் சேவாக்கின் மூத்த மகன் ஆர்யாவீர் சேவாக், தோனி அதிரடி ஷாட் அடிப்பது போல வரைந்துள்ளார்.
இதுகுறித்து டுவிட் செய்துள்ள சேவாக்,
“எனது மூத்த மகன் மாஹியின் (தோனி) படத்தை வரைந்துள்ளார். அது படமாக இருந்தாலும் அதிலும் தோனி பேட்டிங்கில் வெளுத்து வாங்குவது போல தான் உள்ளார்.” என தெரிவித்துள்ளார்.தந்தை சிறந்த அதிரடி வீரராக இருந்தாலும், அவரது மகன் தோனியின் ரசிகன் என சொவதில் பெருமைப்படுகிறார் சேவாக்.