• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீனாக்கார கங்குலி : டுவிட்டரில் சீண்டிய சேவக்!

February 3, 2017 tamilsamayam.com

முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியை, அதிரடி மன்னன் சேவக் டுவிட்டரில் சீண்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், எல்லா வீரர்களும் குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்குவது. சுற்றுலா செல்வது என ஹாயாக ஓய்வு எடுப்பது வழக்கம்.

ஆனால், சேவக் ஓய்வுக்கு பின் தான் ரொம்ப பிஷியாக டுவிட்டர் மூலம் வேலை செய்து வருகிறார். இவர் கிரிக்கெட் விளையாடிய நாட்களில், இவர் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் முன்னாள் கேப்டன் கங்குலி. அதை சேவக்கே பலமுறை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

தவிர, சேவக்கிற்காக டெஸ்ட் போட்டிகளில் தனது ஓபனிங் இடத்தை விட்டுக்கொடுத்தவர் கங்குலி. இந்நிலையில் தனது களத்தில் கங்குலியை வைத்து காமெடி செய்துள்ளார் சேவக். இன்று சேவக் வெளியிட்ட இரண்டு டுவிட்டில், பாண்டா கரடியின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு, அதில், உங்களுக்கு தெரிந்த கண்ணாடி அணிந்த நண்பரின் கண்ணாடிகளை எடுத்து விட்டால், அவர் இப்படி தான் பார்ப்பார் என பதிவிட்டுள்ளார்.

இதை வெளியிட்ட சிறிது நேர கேப்பில், கங்குலியைப்பற்றி இவர் வெளியிட்டுள்ள டுவிட்டில், எனக்கு இரண்டு கங்குலியை தெரியும் ஒன்று தாதா கங்குலி, மற்றொன்ரு சீனா கங்குலி, கண்ணை சிமிட்டி சிமிட்டி, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வாணவேடிக்கை நிகழ்த்தும் அவரை மறக்கவே முடியாது. என குறிப்பிட்டுள்ளார். ஆனால் கங்குலி இதற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

மேலும் படிக்க