November 19, 2018
தண்டோரா குழு
மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.6-வது மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது.மொத்தம் 10 நாடுகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.இதில் ‘ஏ’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ்,இங்கிலாந்து அணிகளும் ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும் அரை இறுதிக்கு நுழைந்தன.
ஹர்மன்பிரித் கவூர் தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை வருகிற 23-ந்தேதி எதிர்கொள்கிறது.மற்றொரு அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 3 முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.இந்த ஆட்டம் 22-ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.