January 26, 2017
tamilsamayam.com
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது கணக்கை முடித்துக்கொள்ள இன்னும் சரியான நாள் வரவில்லை என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளர்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் என குறுகிய தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி, 2-1 என கைப்பற்றியது. இதன் பின் இரு அணிகள் மோதும் டி-20 தொடர், இன்று கான்பூரில் துவங்குகிறது.
இத்தொரில், தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதேபோல, சீனியர் வீரரான யுவராஜ் சிங் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஒருநாள் தொடரில் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட யுவராஜ், டி-20 தொடரிலும் அசத்துவார் என கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோலி கூறுகையில்,
’ டி-20 போட்டிகளில் யுவராஜ் சிங் ஒரு ஸ்பெஷலிஸ்ட். ஒரே ஆளாக போட்டிகளில் வெல்லும் திறமை படைத்தவர் அவர். அதை நான் சொல்லத்தேவையில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும், அவர் இதற்காக கடினமாக பாடுபட்டுள்ளார். இந்திய அணியில் அவரின் கணக்கு இன்னும் முடியவில்லை. நிச்சயம் அவர் பல வெற்றிகளை தேடித்தருவார். .’ என்றார்.