• Download mobile app
26 Dec 2024, ThursdayEdition - 3242
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீவிட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவில்

October 9, 2019 https://www.findmytemple.com

சுவாமி : ஸ்ரீபாண்டுரங்கன்.

அம்பாள் : ஸ்ரீ ருக்மணி.

தலச்சிறப்பு : கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் ஸ்ரீவிட்டல் ருக்மணி ஸம்ஸ்தான் கோவில் உள்ளது. சேங்காலிபுரம் நாராயண தீஷிதர் புதல்வர் ராமதீஷீதர். இவர் இன்றும் பிரவசனம் செய்து கொண்டு வருபவர். இவரது புத்திரர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ். நாமசங்கீர்த்தனமே நாதன்தாள் பற்றுவதற்கான நல்ல வழி என்பதை உலகெங்கும் பறைசாற்றிய ஞானானந்த சுவாமிகள் சீடரான குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகளையும், ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பிரேமி மகராஜ் ஆகியோரை தமது குருவாக ஏற்று நாடெங்கும் நாமசங்கீர்த்தனத்தை நடத்தி வருபவர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் ஆவார்.

வடமாநிலத்தில் பண்டரிபுரத்தில் உள்ள ஸ்ரீபாண்டுரங்கனின் கோவிலை போன்று அனைத்து பக்தர்களும் கோவில் கர்ப்பகிரகத்தினுள் சென்று பகவானை தரிசிக்க வேண்டும் என்று ஜாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடு இல்லாமல் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் கோவிந்தபுரத்தில் பலகோடி மதிப்பில் கோவில் அமைத்துள்ளார். பண்டரிபுரத்திலிருந்து வந்தருளிய பாண்டுரங்கனும், ருக்மணியும் புதிய கோவிலில் அருள்பாலிக்கின்றனர்.

மகாமண்டபம், அர்த்தமண்டபம், நாமசங்கீர்த்தனை கூடம், அன்னதானக்கூடம், மகாபக்த விஜயத்தில் இடம்பெற்றுள்ள பக்த சிரோண்மனிகளின் கதை சிற்பங்கள், பொன் போன்ற ஒளிரும் மேல் விதானம் மடப்பள்ளி போன்றவைகள் தெய்வீகமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பசுக்களுக்கான பிரத்யேக கோசாலை அமைந்துள்ளது. ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் நாடெங்கும் நாமசங்கீர்த்தனம் செய்தே பக்தர்களின் கைங்கர்யத்துடன் கோவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

தல வரலாறு : கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில், ஸ்ரீவிட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 15, 2011 ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஜெயகிருஷ்ண தீட்சிதர் என்ற விட்டல்தாஸ் மகராஜ், பல கோடி ரூபாய் மதிப்பில், மகாராஷ்டிர மாநிலம், பண்டரிபுரத்தில் உள்ள போலவே, இக்கோவிலை அமைத்துள்ளார்.

பண்டரிபுரத்திலிருந்து வந்தருளிய பாண்டுரங்கனும், ருக்மணியும், புதிய கோவிலில் அருள்பாலிகின்றனர். மகாமண்டபம், அர்த்தமண்டபம், நாமசங்கீர்த்தன கூடம், அன்னதானக்கூடம், மகாபக்த விஜயத்தில் இடம்பெற்றுள்ள பக்த சிரோண்மணிகளின் சுதை சிற்பங்கள், பொன் போன்று ஒளிரும் மேல் விதானம், மடப்பள்ளி போன்றவை, பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பசுக்களுக்கான பிரத்யேக கோசாலை அமைந்துள்ளது.

விட்டல்தாஸ் மகராஜ், நாடெங்கும் நாமசங்கீர்த்தனம் செய்து, பக்தர்களின் கைங்கர்யத்துடன் கோவில் திருப்பணி செய்துள்ளார். விமான கும்பாபிஷேகத்தை, விட்டல்தாஸ் மகராஜ் நடத்தி வைத்தார். தொடர்ந்து சுவாமி, தாயார் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விசேஷ தீபாராதனை காட்டப்பட்டது. மண்டலாபிஷேக துவக்கத்தையொட்டி, மகாஅபிஷேகம் நடைபெற்றது. காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகள், அண்ணா கிருஷ்ண பிரேமி சுவாமிகள் ஆகியோரின் அருளாசியுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சேங்காலிபுரம் ராமதீஷீதர் முன்னிலை வகிக்கிறார். கோவில் திருப்பணி வேலைகளில் மஹாராஷ்டிரா ஸ்தபதி பாலாஜி, சென்னை ஸ்தபதி செல்வநாதன், பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர். எங்கும் பார்க்கமுடியாத வகையில் பைபர் கிளாஸில் சீலிங் மோல்டு டெக்கரேஷன் செய்துள்ளனர். 100 கோடி விட்டல் நாமங்களை கீழே உள்ள அறையில் வைத்து அதன் மேலே மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது சிறப்பு ஆகும்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : ஸ்ரீவிட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவில்,

கோவிந்தபுரம், ஆடுதுறை – 621 101, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

தொலைப்பேசி எண் : 0435-2472300.

மேலும் படிக்க