• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில்

June 19, 2017 findmytemple.com

சுவாமி : அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு.

அம்பாள் : ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி.

தீர்த்தம் : சமுத்திர புஷ்கரணி (வங்கக் கடல்).

தலச்சிறப்பு :

விஷ்ணுவின் துணைவியே லட்சுமி தேவி என்பது யாவரும் அறிந்ததே. தனம், தான்யம், கஜம், சந்தானம், வீரம், விஜயம், வித்யா போன்ற பாக்கியங்களை அருளும் இந்த லட்சுமி அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமான ஐதீகமாக பக்தர்களால் கருதப்படுகிறது.

கடற்கரையை ஒட்டியே வீற்றிருக்கும் இந்த கோயில் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவற்றில் எட்டு அவதார வடிவங்களும் வெவ்வேறு பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது தொகுதியில் உள்ள மஹாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவை வணங்கிய பின்னர் மற்ற தெய்வ வடிவங்களை வணங்க வேண்டும் என்ற ஐதீக விதி இங்கு பின்பற்றப்படுகிறது. மூன்றாவது தளத்தில் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் கஜலட்சுமி தெய்வங்கள் வீற்றுள்ளன. நான்காவது தளத்தில் தனலட்சுமி மட்டுமே வீற்றுள்ளார். முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தைரியலட்சுமி மற்றும் தான்ய லட்சுமி தெய்வங்கள் வீற்றுள்ளன.

தல வரலாறு :

காஞ்சிப் பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் கனவிலே தோன்றி தமக்கு இந்த இடத்தில் கோவில் ஏற்படுத்துமாறு மஹாலக்ஷ்மி பணிக்க அதை சிரமேற் கொண்டு இக்கோவில் ஸ்தாபிக்கப்பட்டது. முக்கூர் ஸ்ரீநிவாஸ வரதாச்சாரியார் ஸ்வாமிகளின் பெரு முயற்சியால் இக்கோவில் 1976-ல் கட்டப்பட்டது. கோவை லக்ஷ்மி மில்ஸ் நிறுவனம் இத்திருக்கோவில் கட்ட பெருமளவில் திருப்பணி கைங்கர்யம் செய்திருக்கின்றனர்.

நடைதிறப்பு :

காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் திருவிழா நடைபெறும்,தீபாவளி,லட்சுமி பூஜை,தை வெள்ளி, ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.

அருகிலுள்ள நகரம் : சென்னை.

கோயில் முகவரி : அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில்,பெசன்ட் நகர், சென்னை – 600 090.

மேலும் படிக்க