• Download mobile app
26 Dec 2024, ThursdayEdition - 3242
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்

June 26, 2019 www.findmytemple.com

சுவாமி : அருள்மிகு ஆஞ்சநேயர்.

தலச்சிறப்பு : நாமக்கலில் சுமார் 18 அடி உயரம் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் நின்று தொழுத கைகளுடனும், இடுப்பில் கத்தியுடனும் இருக்கும் திருக்கோவில் ஆகும். ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லினால் ஆனது என்பது சிறப்பு. இந்நகருக்கு சுமார் 10 மைல் தொலைவில் அநேக மூலிகைகளும், பல மரங்களும், தானிய வகைகளும் கொண்ட “சதுரகிரி” என்னும் பெருமை வாய்ந்த “கொல்லி மலை” இருக்கிறது. இங்கு ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துதல், எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல், துளசி மாலை சாத்துதல், வடை மாலை சாத்துதல், பூ மாலை சாத்துதல் ஆகியவை நேர்த்திக் கடனாக செலுத்தப்படுகின்றன. தவிர வெண்ணெய் காப்பு போன்ற சிறப்பு அபிஷேகங்களும் இங்கு செய்யப்படுவது வழக்கம்.

வடைமாலை சாத்துவதன் காரணம் : முன்பு ஒரு சமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும் ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்தி படுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும் சனிக்கு பிடித்த எள்எண்ணெய்யாலும் செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி ராகு இவர்களுடைய இடையூறில் இருந்து மனிதர்கள் விடுபடுகிறார்கள் என்பதற்காகவே தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.

தல வரலாறு : முன்னொரு காலத்தில் மகாலட்சுமி பெருமாளைப் பிரிந்து ஒரு நீர் நிலை அருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கி கடும் தவம் இயற்றினாள். திரேதா யுகத்தில் இராமவதாரத்தில் இராவணனால் வாரை சேனைகளும், இராமரும் மூர்ச்சையடைந்தனர். அப்பொழுது சாம்பவானால் அறிவுறுத்தப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் இமய மலையை வாயு பகவானின் உதவியுடன் சிரஞ்சீவி மலையை பெயர்த்து வந்து சஞ்சீவி மூலிகைகளால் எழுப்பி விட்டு பழையபடி சஞ்சீவி மலையை வைத்து விட்டு திரும்பினார். அப்போது நேபாளத்தில் கண்டகி நதியில் ஓர் சாலிக்கிராம மலையை பார்த்தார், அதில் ஸ்ரீ நரசிம்மர் ஆவிர் பவித்திருப்பதை கண்ட அனுமான் சாலிக்கிராம மலையை வழிபாட்டிற்காக பெயர்த்தெடுத்து ஆகாய மார்க்கமாக இலங்கை நோக்கி பயனித்தார். சூர்யோதய காலம் நெருங்குவதை கண்ட அனுமான் அனுஷ்டானம் செய்ய தீர்மானித்து மகாலட்சுமி தவம் செய்யும் நீர் நிலைகள் அடங்கிய அந்த இடத்தில் வைத்து விட்டு அனுஷ்டானம் செய்தார். திரும்பி வந்து எடுக்க முயன்ற அனுமன் அதை அசைக்கக் கூட முடியவில்லை.

அப்பொழுது ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி ஆஞ்சநேயருக்கு அருள் பாவித்து ராமர் கைங்கரியத்தை முடித்து ராமாவதாரத்திற்கு பின்பு இங்கு பணியாற்றுமாறு உத்தரவிட்டார். பின்பு திரேதா யுகத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரும், கார்கோடகனும் ஆவிர் பவித்து ஸ்ரீ நரசிம்மர் தூணிலும் சாலிக்கிராமத்திலும் இருந்து ஸ்ரீ மகாலட்சுமியின் தவத்திற்காக சாலிக்கிராமகிரி ரூபத்தில் இங்கு எடுத்து வந்து ஸ்தாபிக்கப்பட்டார்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் : அனுமன் ஜெயந்தி.

அருகிலுள்ள நகரம் : நாமக்கல்.

கோயில் முகவரி : அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்,

நாமக்கல் – 637403. நாமக்கல் மாவட்டம்.

தொலைபேசி எண் : 04286 – 233 999.

மேலும் படிக்க