• Download mobile app
21 Nov 2024, ThursdayEdition - 3207
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர்(குரு) திருக்கோவில்

November 27, 2018 findmytemple.com

சுவாமி : ஆபத்சகாயேஸ்வரர்.

அம்பாள் : ஏலவார்குழலி.

தீர்த்தம் : பிரம்மதீர்த்தம், அமிர்த புஷ்கரணி.

தலவிருட்சம் : பூளை என்னும் செடி.

தலச்சிறப்பு :

இக்கோவிலில் குருதட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குருதோஷம் நிவர்த்தியாகும். குருபலன் கிடைக்கிறது என்பது சிறப்பு. தோல் வியாதி உள்ளவர்கள் இத்திருக்கோவிலை சுற்றி உள்ள “அமிர்தபுஷ்கரணி” யில் நீராடி ஆலயத்தின் சிவபெருமானை வழிபட்டால் நோய் விலகும் என்பது ஐதீகம். குருபெயர்ச்சி தினத்தில் வழிபடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. இத்தலத்தில் ஏழுந்தருளியுள்ள விநாயகர் பக்தர்களின் மனக்கவலையை தீர்த்து வைப்பதால் “கலங்காமல் காத்தவிநாயகர் ” என பக்தியுடன் அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய முற்பட்டனர். அவர்கள் தேவாமிர்தத்தை பெறுவதற்காக வாசுகி என்ற தேவலோக பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது அந்தப் பாம்பு கக்கிய ஆலகால விஷத்தை, சிவபெருமான் உலகத்தை காக்கும் பொருட்டு உட்கொண்டார். விஷத்தை அருந்தி உலகைக் காத்ததால் சிவபெருமான் ரட்சகர் என்று பொருள் படும் படி ஆபத்சகாயேஸ்வரர் என்று அன்போடு அழைக்கப் படுகிறார். இந்த இடமும் ஆலங்குடி என்று புகழ் பெற்றது. சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி பிருஹஸ்பதி அல்லது குரு பகவானை (வியாழன்) வழிபட மக்கள் தொலைவிலும் அருகிலும் இருந்து கூட்டமாக வருகின்றனர். எல்லா வருடமும் குருப் பெயர்ச்சியின் பொது துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபெற விக்ரஹத்திற்கு மங்கள அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

மற்றொரு கதையில் முசுகந்தன் என்ற சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். ஆனால் மந்திரியோ மன்னன் கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறு ஆகும். மற்றொரு முறை திருவாரூரை ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தான். இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

பூஜைவிவரம் :

நான்கு கால பூஜைகள்,

காலசந்தி – காலை 9.00 மணி,

உச்சிகாலம் – மதியம் 12.30 முதல் 1.00 மணி,

சாயரட்சை – மாலை 5.30 முதல் 6.00 வரை,

அர்த்தசாமம் – இரவு 8.30 முதல் 9.00 வரை.

திருவிழாக்கள் : மாசிமாதம் 3-வது வியாழக்கிழமை “மாசி மகா குருவார தரிசனவிழா”.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில்முகவரி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்,ஆலங்குடி – 612 801, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம்.

மேலும் படிக்க