September 29, 2018 findmytemple.com
சுவாமி:ஆளுடையார்.
அம்பாள்:மைவிழியாள்,பாலாம்பிகை.
தலச்சிறப்பு:இக்கோவில் மலையை செதுக்கி உயரமான மலை மேல் அமைக்கப்பட்டுள்ளது ஆலயம்.கருவறையில் இறைவன் ஆளுடையார்,லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.இவருடைய திருமேனி எட்டரை அடி உயரத்தில்,பிரம்மாண்டமாக, அழகிய திருக்கோலத்துடன் அமைந்திருப்பதும் மற்றும் இங்கே அம்பாளுக்கு இரண்டு சந்நிதிகள் இருப்பது சிறப்பாகும்.கிழக்கு நோக்கி இருக்கும் சந்நிதியில் அம்பாளுக்கு அஞ்சனாக்ஷி என்றும் தூய தமிழில் மைவிழியாள் என்றும் அழைக்கப்படுகிறாள்.கண்களுக்கு மை தீட்டிய அந்தக் கருணைக் கடல்,தமது ஒரு கண்ணால் பக்தர்களின் தீமைகளை அழித்து,மறு கண்ணால் நன்மைகளைப் பொழிகிறாள்.மேற்கு நோக்கி இருக்கும் மற்றொரு சந்நிதியில் பாலாம்பிகை என்ற திருநாமத்துடன் அம்பிகை அருள்பாலிக்கிறாள்.தெற்கில் தட்சிணாமூர்த்தியும்,கிழக்கில் பெருமாளும்,வடக்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்க,விஷ்ணு துர்க்கையின் எதிரே சண்டீஸ்வர சன்னதி, ஆஞ்சநேயர்,விநாயகர் சன்னதிகளும் உள்ளன.முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம்,நடுவே பிரமாண்டமான நந்தி மண்டபமும் உள்ளது.
அருகிலுள்ள நகரம்:திருச்சி.
கோயில் முகவரி:அருள்மிகு ஆளுடையார் திருக்கோவில்,உய்யக்கொண்டான் திருமலை,திருச்சி மாவட்டம்.