March 15, 2018
findmytemple.com
சுவாமி : த்ரிவிக்ரமன் (திருவடியை உயரே தூக்கிய நிலை நின்ற திருகோலம்).
அம்பாள் : பூங்கோவல் நாச்சியார்.
தீர்த்தம் : பெண்ணையாறு, கிருஷ்ணா தீர்த்தம், சக்ர தீர்த்தம்.
விமானம் : ஸ்ரீஹர விமானம்.
தலவிருட்சம் : புன்னை மரம்.
தலச்சிறப்பு :
வாமன த்ரிவிக்ரம அவதார ஸ்தலம். இந்த திவ்ய தேசத்தில்தான் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற முதலாழ்வார்கள் மூவரும் ஓர் இரவில் இடைகழியில் சந்தித்து பெருமாளையும் பிராட்டியையும் நேரில் இருட்டில் நெருக்கியபடி சேவித்து மூன்று திருவந்தாதிகளை பாடிய தலம். மூலவர் வலக்கையில் சங்கமும் இடக்கையில் சக்ரமுமாக வலகாலால் வையம் அளந்து நிற்கிறார்.கோயிலுக்குள் இருக்கும் துர்க்கை தேவதாந்திரமாகக் கருதப்படுவதில்லை.மகாபலியின் கர்வத்தை அடக்கி ஆட்கொண்ட ஸ்தலம்.
தேசிகன் தேஹளீசதஸ்துதி இயற்றிய ஸ்தலம்.எம்பெருமானார் ஜீயர் பரம்பரை மஹான்கள் ஆதிக்கத்துக்குட்பட்ட ஸ்தலம்.இந்த ஊர் பஞ்ச க்ருஷ்ணாரண்ய கேஷ்த்திரங்களில் ஒன்று. மற்றவை – திருக்கண்ணங்குடி, திருக்கண்ணன் கவித்தலம், திருகண்ணபுரம், திருகண்ணமங்கை. மூலவரின் திருமேனி தாருவால்(மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள நகரம் : விழுப்புரம்.
கோயில் முகவரி : அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில்,திருக்கோவிலூர் – 605757, விழுப்புரம் மாவட்டம்.