July 3, 2018 findmytemple.com
சுவாமி:அருள்மிகு கருக்குடிநாதர்.
அம்பாள்:அருள்மிகு கல்யாண நாயகி.
மூர்த்தி:அனுமத் லிங்கம்,விநாயகர்,கார்த்திகேயன்.
தலச்சிறப்பு:ஆவுடையார் மண்ணாலானது,ஏனாதி நாயனார் பிறந்த ஊர் அருகில் உள்ளது என்பர்.சிறிய பழைமையான கோயில் ஆகும்.கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது.சுவாமி,அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.
கருவறை விமானங்கள் மிகவும் உயர்ந்தவை.வாயிலில் விநாயகர்,கார்த்திகேயர் சந்நிதிகள் உள்ளன.பக்கத்தில் உள்ளது அனுமத்லிங்கம்.கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது.இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது.அரையடி உயர சிறிய ஆவுடையார் பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள நகரம்:கும்பகோணம்.
கோயில் முகவரி:அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோவில்,மருதநல்லூர் அஞ்சல் – 612 402, கும்பகோணம் வட்டம்,தஞ்சை மாவட்டம்.