May 12, 2018 findmytemple.com
சுவாமி : கூடலழகர்.
அம்பாள் : மதுரவல்லி, மரகதவல்லி.
தீர்த்தம் : ஹேமபுஷ்கரிணி.
தலவிருட்சம் : கதலி.
விமானம் : அஷ்டாங்க விமானம்.
தலச்சிறப்பு :
கிருதாயுகம்,கிரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் ஆகிய 4 யுகங்களிலும் இத்தலம் சிறந்து விளங்குகிறது.எம்பெருமான் இத்தலத்தில் அஷ்டாங்க விமானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் முதல் தளத்திலும்,நின்ற திருக்கோலத்தில் இரண்டாம் தளத்திலும்,சயன திருக்கோலத்தில் மூன்றாம் தளத்திலும் காட்சி தருவது எழில்மிகு தோற்றமாகும்.
அருள்மிகு கூடழகர் பக்தர்களை “வா” என்று அழைத்து “அபயம்” அளித்து “ஆஹீயாவரதன்”, “அபயதிருக்கரத்தன்” என்ற திருநாமத்தை கொண்டவராய் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.திருமால் வீற்றிருக்கும் விமானத்தில் தலையானதும் சிறந்ததுமான அஷ்டான விமானம் – திருவெட்டெழுத்து மந்திரமான “ஓம்நமோநாராயணாய” என்பதன் வடிவமாகும்.பெருமானின் மூன்று நிலைகளையும் கொண்ட இவ்விமானத்தை ஒருமண்டலம் (48 நாட்கள்) வலம் வந்தால் நினைத்தகாரியங்கள் கைகூடும் என்பது சிறப்பு.
அருகிலுள்ள நகரம் : மதுரை.
கோவில் முகவரி : அருள்மிகு கூடலழகர் திருக்கோவில்,மதுரை – 625 001.