• Download mobile app
21 Nov 2024, ThursdayEdition - 3207
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு கைலாசநாதர்(சந்திரன்) திருக்கோவில்

May 7, 2019 www.findmytemple.com

சுவாமி : கைலாசநாதர்.

அம்பாள் : பெரியநாயகி.

தீர்த்தம் : சந்திர தீர்த்தம், காவிரி ஆறு.

தலவிருட்சம் : வில்வம்/வாழை.

தலச்சிறப்பு : சூரிய, சந்திரன் ஆகியோர்களுக்கு தனி சன்னதி உண்டு. கோள்கள் சூரியனை பார்த்தவாறு அமைந்து உள்ளது. பங்குனி உத்திரம் நாளன்று காலை 6 மணிக்கு இறைவன் மீது சூரிய ஒளியும், மறுநாள் மாலை சந்திர ஒளியும் படரும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. தமிழகத்தில் அன்னப் பிரசாதத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும். நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரணம் ஆவார். காலரா, நுரையீரல் நோய்கள் போன்றவை நீங்க இவரை வழிபடலாம். வெண்மை நிற மலர்களால் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற ஆடைகள் உடுத்தி, முத்து மாலை அணிந்து, பெளர்ணமி விரதம் இருந்து வழிபடலாம்.

தல வரலாறு : இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. திராவிடக் கட்டிடக் கலையை பின் பற்றி கட்டப்பட்டுள்ளது இக்கோவில். அப்பூதியடிகள் என்ற 63 நாயன் மார்களில் ஒருவரான இவர் திங்களூரை சேர்ந்தவர். இவர் சிவபெருமான் மீது கொண்ட பற்றால், சிவபெருமான் மீது பக்தி கொண்ட திருநாவுக்கரசர் பெயரை தன் மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயர் வைத்தார். மேலும் திருநாவுக்கரசர் பெயரில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார்.

ஒரு நாள் திருநாவுக்கரசர் திங்களூருக்கு வந்த போது அப்பூதியடிகள் பற்றி கேள்விப் பட்டு அவரை காண சென்றார். திருநாவுக்கரசரை கண்ட அப்பூதியடிகள் அவரை வரவேற்று உணவு அளிக்க விரும்பினார். தன் மகனை வாழை இலை பறித்து வருமாறு அனுப்ப அங்கே அவனை பாம்பு தீண்டியது.

தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தி கேட்டால் திருநாவுக்கரசர் சாப்பிட மாட்டாரோ என்று என்னிய அப்பூதியடிகள் அதனை மறைத்து உணவு அளித்தார். மகனை பற்றி அறிந்த திருநாவுக்கரசர், அவனின் உடலை திங்களூர் திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று “ஒன்று கொலாம் அவர் சிந்தை” என்று பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார். இதுவே இக்கோவில் வரலாறு ஆகும்.

நடைதிறப்பு : காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : திருவையாறு.

கோயில்முகவரி : அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,

திங்களூர் – 613 204, தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க