May 24, 2018 findmytemple.com
சுவாமி : கொளஞ்சியப்பர்
தீர்த்தம் : மணிமுத்தாறு
தலவிருட்சம் : கொளஞ்சிமரம்
தலச்சிறப்பு : சங்க காலத்தில் நடுநாடு என போற்றப்பட்ட கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் மலர் தலை உலகின் கண் உள்ள எல்லா உயிர்களுக்கும் உய்யும் பொருட்டு கருணையே திருவுருவாக உடைய சிவபெருமான் திருக்கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள நடுநாட்டுத் திருத்தலங்கள் பலவற்றுள் சிறப்புற்று ஓங்கிய “திருமுதுகுன்றம்” எனும்விருத்தாசலத்திற்கு மேற்பால் ஒரு கல் தொலைவில்காவும் பூவும் நிறைந்த புள்ளினங்களும்.வண்டினங்களும் இசைபாடும் இறைமணம் நிறைந்த மணவாளநல்லூர் என்னும் சிற்றூர் உள்ளது.”குரங்குலாவும் குன்றுரை மணவாள” என்று அருணாகிரிநாதர் அருளியவாறு மணவாளரான கந்த பெருமான் எழுந்தருளிய காரணத்தால் இவ்வூர் மணவாளநல்லூர் என்றாகியது.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள நகரம் : விருத்தாசலம்
கோயில் முகவரி : அருள்மிகு கொளஞ்சியப்பர் கோவில், மணவாளநல்லூர்-606001, விருதாச்சலம், கடலூர் மாவட்டம்.