July 2, 2018 findmytemple.com
சுவாமி:சங்கமேஸ்வரர்.
அம்பாள்:வேதநாயகி.
தீர்த்தம்:முக்கூடல் தீர்த்தம்,காயத்ரி தீர்த்தம்.
தல விருட்சம்:இலந்தைமரம்.
தலச்சிறப்பு:தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் பவானியும் ஒன்றாகும்.பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. காவிரி,பவானி நதிகள் கூடும் சங்கமத் துறையில் காயத்ரி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.முனிவர் விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர் என்று பெயர்.இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம்.இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லையாம். இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது.
அருகிலுள்ள நகரம்:ஈரோடு.
கோயில் முகவரி:அருள்மிகு சங்கமேசுவரர் திருக்கோவில்,பவானி – 638 301, ஈரோடு மாவட்டம்.