சுவாமி: அருள்மிகு சுவாமிநாத சுவாமி
அம்பாள்: வள்ளி, தெய்வானை
மூர்த்தி: விநாயகர்,தாரகாபரமேஸ்வர்,சுந்தரேஸ்வரர்,மீனாட்சி, லட்சுமி,சரஸ்வதி,வள்ளி,தெய்வானை.
தீர்த்தம்: வஜ்ரதீர்த்தம்,குமாரதாரை தீர்த்தம்,சரவண தீர்த்தம்,நேத்திர புஷ்கரணி,பிரம்மதீர்த்தம்.
தலவிருட்சம்: நெல்லி மரம்
தலச்சிறப்பு:
திருமுருகாற்றுப்படையால் பாடப்பட்ட அறுபடை வீடுகளுள் நான்காவது,சுவாமிமலை. சிவ பெருமானுக்கு திருமுருகன் பிரணவப் பொருளை உபதேசித்த தலம். சுவாமிநாத சுவாமி இடது கையை தொடையில் வைத்தும்,வலது கையை தண்டத்துடன் நின்ற திருக்கோலம். பீடம் சிவலிங்கத்தின் ஆவுடையராகவும் இருக்கும். இங்கு தமிழ் வருட தேவதைகள் 60 படிகளாகஅமைந்துள்ளன. சுவாமி நாதசுவாமி சன்னதிக்கு நேரில் யானை வாகனமாக உள்ளது.இது தேவேந்திரனால் வடிவமைக்கபட்ட ஐராவதமாகும். இது கோயிலின் தொன்மையைக் காட்டுகிறது.வாரந்தோறும் வியாழக்கிழமை மாலையில் வைரவேல் மற்றும் தங்க கவசமும்,செவ்வாய்க்கிழமை மாலையில் சொர்ண புஷ்ப சகஸ்ர நாம மாலையும் சாத்தபடுகிறது.
வழிபட்டோர் : நான்முகன், பூமகள், இந்திரன், சோழமன்னன், வரகுணபாண்டியன் சுகர்பிரகதீஸ்வரர், சரவணன், சுமதி.
பாடியோர்: நக்கீரர்–திருமுருகாற்றுபடை,அருணகிரிநாதர்-திருப்புகழ்தியாகராஜ தேசிகர் –நவரத்தின மாலை ,கபிஸ்தலவேலய்யர்-திருஏரக எமக அந்தாதி.
நடைதிறப்பு: காலை 6 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
பூஜை விவரம்: ஆறு கால பூஜை
திருவிழாக்கள்: சித்திரை-பிரம்மோற்சவம்(10நாட்கள்)தேர்த் திருவிழா,
வைகாசி –விசாகப் பெருவிழா,
ஆவணி-பவித்ரோற்சவம்(10நாட்கள்),
புரட்டாசி –நவராத்திரி விழா(10 நாட்கள்),
ஆடி –கிருத்திகை அன்று தெப்பக் காட்சி,
ஐப்பசி –கந்த சஷ்டிப் பெருவிழா (சூரசம்ஹாரம் விழா) ,
கார்த்திகை –திருகார்த்திகை பெருவிழா(தீபக்காட்சி),
மார்கழி –திருவாதிரைத் திருநாள். தனுர்மாத பூஜை ,
தை-பூசப் பெருவிழா,
பங்குனி உத்திரம்-வள்ளித் திருகல்யாண விழா,தமிழ்,ஆங்கில புத்தாண்டு முதல்நாளில் படிவிழா.
அருகிலுள்ள நகரம்: கும்பகோணம்
கோயில் முகவரி: அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில்,சுவாமிமலை –அஞ்சல்-612 302,கும்பகோணம் வட்டம் ,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது