June 20, 2018
findmytemple.com
சுவாமி:அருள்மிகு சுவேதாரண்யேசுவரர்.
அம்பாள்:அருள்மிகு பிரம்மா வித்யாம்பிகை.
மூர்த்தி:சுவேதாரண்யேசுவரர்,நடராசர்,அகோரமூர்த்தி,முருகன்,காளி,துர்க்கை,புதன், அறுபத்து மூவர்.
தீர்த்தம்:சூரிய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்,அக்னி தீர்த்தம்.
தலவிருட்சம்:ஆல்,வில்வம்,கொன்றை.
தலச்சிறப்பு:வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள பழமையான பதி.காசிக்கு சமமான ஆறுதலங்களுள் இதுவும் ஒன்று.மூர்த்தி,தீர்த்தம்,விருட்சம்,ஒவ்வொன்றும் இத்தலத்தில் மும்மூன்றாக அமைந்துள்ளது.51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.சிவன் அகோர மூர்த்தியாக எழுந்தருளி மருத்துவனை சம்ஹாரம் செய்துள்ளனர்.
கார்த்திகை ஞாயிறு கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.இத்தலத்தில் நடராசப் பெருமான் நவதாண்டவங்களை சகுணமாக ஆடியுள்ளார்.திருவெண்காடராகிய பட்டினத்தடிகள் வாழ்ந்தும்,சிவதீட்சை பெற்றதும்,சிவஞான போதத்தை அருளிய மெய்கண்டார் அவதரித்ததும் இத்தலமே.சிறுத்தொண்டர் இளமையில் வாழ்ந்ததும்,அவர் திருவெண்காடு நங்கை பிறந்ததும் இத்தலமே.நவக கிரக தலங்களில் இது புதன் தலமாகும்.நவக்கிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி.இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும்,பீடை போகும்,கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும்.புதனை வழிபடுவோம் என்றென்றும் ஆனந்தமாக இருப்போம்.