July 14, 2018
findmytemple.com
சுவாமி: ஜம்புகேஸ்வர் (அப்புலிங்கேஸ்வரர்).
அம்பிகை:அகிலாண்டேஸ்வரி.
புனித நீர்:காவிரி மற்றும் நவதீர்த்தம்.
மரம்:வெண்ணாவல் மரம் (ஜம்பு).
தலச்சிறப்பு:மதுரையைப் போல,இத்தலத்திலும் சிவபெருமான்,சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார்.இப்பகுதியை ஆண்ட மன்னன்,கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான்.அப்போது போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.ஆனாலும்,அவனுக்கு போர் செய்வதில் மனமில்லை.அவன் சிவனை வேண்டினான்.சிவன் விபூதிச் சித்தராக வந்து,பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார்.இதையறிந்த மன்னன் மகிழ்ந்தான்.சிவன் கட்டிய மதில் “திருநீற்றான் திருமதில்” என்றும்,பிரகாரம் “விபூதி பிரகாரம்” என்றும் அழைக்கப்படுகிறது.விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது.
அருகிலுள்ள நகரம்:திருச்சி.
முகவரி:அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில்,
திருவானைக்கோவில்,திருச்சி – 620 005.