August 29, 2018 findmytemple.com
சுவாமி: தாருகாவனேஸ்வரர் (பராய்த்துறைநாதர்).
அம்பாள்: ஹேமவர்ணாம்பிகை (மயிலாம்பிகை), துர்க்கை, கஜலக்ஷ்மி, சப்தகன்னியர்.
மூர்த்தி: வலம்புரி விநாயகர், அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், மகாகணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிக்ஷாடனார், பிரம்மா, தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர்.
தீர்த்தம்: காவிரி.
தலவிருட்சம்: பராய் மரம்.
தல வரலாறு: பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளி இருப்பதால் இத்தலம் “பராய்த்துறை” எனப்படுகிறது.இத்தலத்திற்கு “தாருகாவனம்” என்றும் பெயரும் உண்டு (பராய் மரம், சமஸ்கிருதத்தில் “தாருகா விருக்ஷம்” எனப்படுகிறது).இந்த பராய் மரத்திற்கு எளிதில் குணப்படுத்த முடியாத சிலவகை தோல் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக நம்பப்படுகிறது.