May 15, 2018 findmytemple.com
சுவாமி : நடராஜர், ஆதிமூலநாதர்.
அம்பாள் : சிவகாமசுந்தரி உமையாம்பிகை.
தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம் மற்றும் 6 தீர்த்தங்கள்.
தலவிருட்சம் : தில்லைவனம்,ஆல்.
தலச்சிறப்பு : பஞ்சபூதத்தலத்தில் இது ஆகாயதிருத்தலம் ஆகும்.வானத்தில் கலந்த சிவத்தை கண்ணால் காண இயலாது எனும் தத்துவத்தை சிதம்பர ரகசியமாக கொண்ட ஆலயம். பொற்சபை,கனக சபை,தாரகவதம் புரிந்த காளியுடன் உற்தவ தாண்டவமாடிய சிவன்.தில்லையில் வடக்கே எல்லைக் காளியாக்கிய தில்லையம்மன் ஆலயம் அமையப் பெற்றுள்ளது.நான்கு இராஜகோபுரங்கள்,பொன்தகடு வேயப் பெற்ற கோபுரங்கள் உள்ள இக்கோவில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.அர்த்தஜாம பூஜை விசேஷமானது.கோவில் மொத்த பரப்பளவு 16 ஏக்கர் ஆகும்.சிதம்பரம் தரிசிக்க முக்தி தரும் சிறப்பானஆலயம்.12 ராசிகள் மண்டப விதானத்தில் உள்ளது.
நடைதிறப்பு : காலை 6.00 மணிமுதல் 1.00 மணிவரை.மாலை 4.00 மணிமுதல் இரவு 9.30 மணிவரை.
அருகிலுள்ள நகரம் : சிதம்பரம்.
கோயில்முகவரி : அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில்,சிதம்பரம்- 608 001. கடலூர் மாவட்டம்.