June 9, 2018 findmytemple.com
சுவாமி: நீலமேகர்,வீரநரசிம்மர்,மணிக்குன்றர்.
அம்பாள்: செங்கமலவல்லி,அம்புஜவல்லி,தஞ்சை நாயகி.
மூர்த்தி: சக்கரத்தாழ்வார்.
தீர்த்தம்: அமிர்த தீர்த்தம், கன்னிகா புஷ்கரிணி, வெண்ணாறு, ஸ்ரீராம தீர்த்தம், சூர்ய புஷ்கரிணி.
தலவிருட்சம்: மகிழம் மரம்.
தலச்சிறப்பு: பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 3வது திவ்ய தேசம் ஆகும். சோழர்களால் கட்டப்பட்ட திருக்கோவில்.பூதத்தாழ்வார்,நம்மாழ்வார்,திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்த திருத்தலம்.அருள்மிகு நீலமேகப்பெருமாள் கோவிலில் இறைவன் அமர்ந்த திருகோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.இறைவி செங்கமலவல்லி ஆவாள்.அருள்மிகு மணிக்குன்றப் பெருமாள் கோவிலில் இறைவன் அமர்ந்த திருகோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இறைவி அம்புஜவல்லி ஆவாள்.வீரநரசிம்ம பெருமாள் கோவிலில் இறைவன் அமர்ந்த திருகோலத்தில் கிழக்கு நோக்கி ஸ்ரீவீரசிங்கப்பெருமாள்,நரசிம்மன் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இறைவி தஞ்சை நாயகி ஆவாள்.சிங்கப்பெருமாள் கோவில் வீர நரசிம்மர்,முன் மண்டபத்தில் யோக நரசிம்மர்,நீலமேகப்பெருமாள் கோவில் பிரகாரத்தில் இருக்கும் லட்சுமி நரசிம்மர்,கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர்,தாயார் சன்னதியில் உள்ள தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் என இந்த திவ்ய தேசத்தில் பஞ்ச நரசிம்மர்கள் அருள்பாலிக்கின்றனர்.
அருகிலுள்ள நகரம்:கும்பகோணம்.
கோவில் முகவரி:அருள்மிகு நீலமேகப்பெருமாள் கோவில் (மாமணிக்கோவில்),
தஞ்சாவூர் – 613 003.