July 25, 2018 findmytemple.com
சுவாமி:மாற்றுரைவராதீஸ்வரர்.
அம்பாள்:பாலாம்பிகை.
தலச்சிறப்பு:இது 275 தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.அன்னமா பொய்கையை உருவாக்க கிளி தனது அலகால் தோண்டி உருவாக்கிய குளம் பாலாம்பிகை சன்னிதானத்தின் முன் உள்ளது.
இத்தலத்தில் அம்மன் சன்னதி மேற்கு நோக்கி சிவபெருமானை நோக்கி உள்ளது.திருமணம் ஆகாதவர்கள் இவ்வம்மையாரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் வரன் சிறப்பாக அமையும் என்பது பக்தர்கள் கருத்து.தொடர்ந்து 48 நாட்கள் இத்தலத்தில் நடராஜருக்கு அர்ச்சனை செய்வித்தால் தீராத நோய்கள்,வயிற்றுவலி,பித்தம்,வாதம் போன்ற நோய்கள் நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம்.
மாற்றுரைவராதீஸ்வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இலுப்பை நெய் தீபம் இட்டு வழிபட்டால் பொருளாதார சுவிட்சம் ஏற்படும் என்பது திண்ணம்.இக்கோயிலுக்கு முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியன்,முதற் குலோத்துங்கன்,கிருஷ்ண தேவராயர் ஆகியோர் திருப்பணிகள் செய்துள்ளது தெரியவருகிறது.
கி.பி. 1253-ல் சமயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹொய்சளமன்னனான, வீரசோமேஸ்வரன் காலத்தில் இக்கோயிலுக்கு பதினாயிரம் கலம் நெல் கிடைத்து வந்ததாக கல்வெட்டு மூலம் அறிகிறோம்.இதனுடைய ஆதி பெயர் திருப்பாச்சிலாச்சிராமம் பின்னர் மருவி திருவாசி ஆகிற்று.வன்னி மரம் சூழ்ந்த வனத்தில் உள்ளவராதலின் ‘சமீவனேஸ்வரர் ‘ என்று இங்குள்ள இறைவன் அழைக்கப்படுகிறார்.