June 26, 2018
finadmytemple.com
சுவாமி: அருள்மிகு கோகர்ணேசுவரர், அருள்மிகு மகிழவனேசர்.
அம்பாள்: அருள்மிகு பிரகதம்பாள்,அருள்மிகு பெரியநாயகி,அருள்மிகு மங்கள நாயகி.
தீர்த்தம்: கங்கா தீர்த்தம் (சுனை),மங்கள தீர்த்தம்(மகிழவன நாதர் திரு முன்பு).
தலவிருட்சம்: மகிழ மரம் (காமதேனுப் பசு வழிபட்டது).
தலச்சிறப்பு: இத்தலம் உருவான காலம் ஏழாம் நூற்றாண்டு(கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக்கிறார்கள்.திருகோகர்ணம் குடவரைக் கோயில் ஆகும்.குடவரைக் கோயில்கள் என்பவை,செயற்கையான கட்டுமானங்கள் இல்லாமல்,முழுமையான பாறைப்பகுதியை அப்படியே குடைந்து மண்டபங்கள்,இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டவை.திருகோகர்ணம் கோகர்ணேசுவரரின் கருவறை, மலைச் சரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.நடுவில் தனி அறையில் பெரிய சிவலிங்கம் வடிக்கப்பட்டிருக்கிறது.அதற்கு முன்னால் உள்ள மண்டபப் பகுதியில் இடப்புறச் சுவரில் விநாயகரும்,வடப்புறச் சுவர்ப்பகுதியில் கங்காதரமூர்த்தியும் வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.