December 19, 2018 findmytemple.com
சுவாமி : அருள்மிகு புண்டரிகாட்சபெருமாள்.
அம்பாள் : செண்பகவல்லி, பங்கயச்செல்வி.
தீர்த்தம் : மதிலுக்குள்ளேயே 7 தீர்த்தங்கள் உள்ளன. திவ்யகந்த, கூசிரபுச்கரணிகள், குச, சக்ர, புஷ்கல, பத்ம, வராஹ மணிகர்ணிகா.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
விமானம் : விமலாக்ருதி விமானம்.
தலச்சிறப்பு :
பெருமாளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இந்த 18 படிகளும், 18 கீதை அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுரவாயிலில் நான்கு வேதங்களாக கருதப்படுகிறது. அதன் பின் பலிப்பீடம் உள்ளது. பலி பீடத்தை சேவித்து ஐந்து படிகளை கடக்க வேண்டும். இந்த 5 படிகளும் பஞ்சபூதங்களாக கொள்ளப்படுகிறது. அதன் பின் நாழிக் கேட்டான் வாசலை அடைய வேண்டும். கருவறைக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி “தட்சிணாயனம்” ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை திறந்திருக்கும்.
இரண்டாவது வழி “உத்தராயணம்” தை மாதம் முதல் ஆனி மாதம் வரை திறந்திருக்கும். நினைத்த நல்ல காரியங்கள் நிறைவேற “பலிபீடு திருமஞ்சனம்” செய்வதாக பிரார்த்தனை செய்து காரிய சித்தியான பின் பலிபீட திருமஞ்சனம் செய்து பெருமாளுக்கு, பலி பீடத்திற்கும் பொங்கல் பிரசாதம் தளிகை அமுது செய்து பிரார்த்தனையை முடிப்பர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தங்களில் தீர்த்தமாடி, பின்னர் பெருமாளுக்கு அமுது செய்து பொங்கலை சாப்பிட்டால் “புத்ரபாக்கியம்” ஏற்படுவது கண்கூடு.
தலவரலாறு :
சிபி சக்ரவர்த்திக்கு ஸ்வேத வராஹனாக (வெள்ளை பன்றி) பெருமாள் காட்சி தந்ததால் பெருமாளுக்கு “ஸ்வேதபுரிநாதன் “ என்ற பெயர் ஏற்பட்டதாக ஸ்தலபுராணம்.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் பகல் 1.15 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
திருவிழாக்கள் :
சித்திரை – கோடைதிருநாள், சித்ராபௌர்ணமி கஜேந்திரமோட்சம்,
ஆடி – கேட்டை நட்சத்திரத்தில் ஜேஸ்டாபிஷேகம்,
ஆவணி – ஸ்ரீஜெயந்திவீதியடி புறப்பாடு,
ஐப்பசி – பெருமாள், தாயார் பிரம்மோற்த்சவம்,
கார்த்திகை – திருக்கார்த்திகை புறப்பாடு.
அருகிலுள்ள நகரம் : திருச்சி.