November 15, 2018 findmytemple.com
சுவாமி : நிசம்பசூதனி,வடபத்ரகாளி
தலச்சிறப்பு : நிசும்பசுதனி கோவில் தஞ்சாவூர் நகரத்தின் மத்தியில் உள்ளது. இக்கோவில் தஞ்சை பெரிய கோவிலை விட பழமை வாய்ந்தது. விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக இக்கோவிலை கட்டியுள்ளான். கல்கி தனது புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன் “ நாவலில் இப்போரை வாட்டர்லூ யுத்தம் மற்றும் பானிபட் யுத்தத்திற்கு இணையானதாக வர்ணிக்கிறார். இக்கோவிலில் உள்ள தேவி ஆக்ரோஷமான துர்க்கை ஆவாள். நிசும்பன் என்கிற அரக்கனை கொல்வது போல் இருப்பதால் இவளுக்கு நிசும்பசுதனி என்று பெயர். இக்கோவில் “வட பத்திர காளி” என்றும் “ராகு கால காளி” என்றும் அழைக்கப்படுகிறது.
நடைதிறப்பு : காலை6.00மணி முதல் மதியம் 12.00மணி வரை ,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00மணி வரை .
அருகிலுள்ள நகரம் : தஞ்சாவூர்
கோயில் முகவரி : அருள்மிகு வடபத்ரகாளி கோவில்,ராவுத்தன் கோவில் தெரு, கீழவாசல், தஞ்சாவூர் மாவட்டம்.