September 5, 2018 findmytemple.com
சுவாமி: வைத்தமாநிதிப்பெருமாள்.
அம்பாள்: குமுதவல்லி,கோளூர்வல்லி.
தீர்த்தம்:குபேரதீர்த்தம்,தாமிரபரணி நதி.
விமானம்: ஸ்ரீகர விமானம்.
தல வரலாறு:குபேரன் ஒரு முறை சிவனை வழிபட கைலாயம் சென்றான்.அங்கே உமையவள் சிவனுடன் இருக்க இவனது கண்கள் உமையவளை கெட்ட நோக்கத்தோடு பார்க்க,இதனால் கோபம் கொண்ட பார்வதி குபேரனை சபித்தாள். அதனால் அவனிடம் இருந்த நவநிதிகளும் அகன்று உருவம் விகாரமானது. நவநிதிகளும் தவமிருந்து இவ்வூர் பெருமாளை அடைக்கலம் கொண்டதால் வைத்தமாநிதி பெருமாள் (நிதிகளை வைத்திருபவர்) என அழைக்கப்படுகின்றார்.
நடைதிறப்பு: காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம்: திருநெல்வேலி.
கோயில் முகவரி: அருள்மிகு வைத்தமாநிதிப்பெருமாள் திருக்கோவில்,திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம்.