January 10, 2019 www.findmytemple.com
சுவாமி : ஸ்ரீ ஐய்யனார்.
அம்பாள் : பூர்ணாதேவி, புஸ்கலாதேவி.
தலச்சிறப்பு : தாருகாவனத்தில் இருந்த மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக சிவபெருமான் பிட்சாடனர் உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீடுகளுக்கு சென்று பிச்சை கேட்டார். சிவபெருமானின் தோற்றத்தைக் கண்ட மகரிஷிகளின் பத்தினிகளுக்கு மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. அதே போல் மோகினி ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று ரிஷிகளின் மனதிலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தினார். இதனால் வேள்வி தடைபட்டது. அப்பொழுது மோகினி உருவத்தின் மீது சிவபெருமான் காதல் கொண்டதால், கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐய்யனார் அல்லது சாஸ்தா என அழைக்கப்படுகிறார்.
ஐய்யனார் மாசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார். ஐய்யனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவிகள் உள்ளனர், ஐய்யனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். ஆனால் பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.