December 5, 2018 tamil.samayam.com
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில், ஆருத்ரா தரிசனம் வருகிற 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பூலோகக் கைலாசம் என அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று காலை, சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு, பிரகாரம் வலம் வந்து கொடிமரம் சன்னதியில் எழுந்தருளுவர். பின், கொடி மரத்திற்கு உற்சவ ஆச்சாரியார் நடராஜ தீட்சிதர் சிறப்பு பூஜைகள், பன்னிரு திருமுறை வழிபாடு நடைபெற்று, காலை, 8:00 மணியளவில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து தினமும், சிவாகமசுந்தரி அம்மன் சமேத நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.