March 30, 2018 findmytemple.com
சுவாமி : ஜெயவிளங்கி அம்மன்.
தலச்சிறப்பு : அரிமழம் ஜெயவிளங்கி அம்மன் கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு, ஜெயவிளங்கி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.ஜெயவிளங்கியம்மன் சன்னதியில் ஏரழிஞ்சிப்பழம் என்ற அரியவகை பழம் காணப்பட்டதால் அரும்பழம் என்று பெயர் ஏற்பட்டு பின்னர் அரிமழம் என்று மருவியதாகவும் கூறப்படுகிறது.
அரிமழம் ஜெயவிளங்கி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பத்து நாள் திருவிழா நடைபெறும். திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கும்.அன்று முதல் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் அம்மன் வீதி உலா நடைபெறும்.
ஒன்பதாம் நாள் தேர் திருவிழா நடைபெறும். பத்தாம் நாள் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம். காவடி எடுத்து அம்மனை வழிபடுகிறார்கள்.மாலையில் மதுக்குடத்(முளைப்பாரி) திருவிழாவில் பெண்கள் குடங்களில் தென்னம்பாளை மற்றும் பூ வேலைப்பாடுகள் கொண்ட குடங்களை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக வந்து அம்மனை வழிபடுகிறார்கள்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : அரிமழம், புதுக்கோட்டை.
கோயில் முகவரி : அருள்மிகு ஸ்ரீ ஜெயவிளங்கி அம்மன் ஆலயம்,அரிமழம், புதுக்கோட்டை.