• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புல்லட் பைக்கை கடவுளாக வழிபடும் விநோத கோயில்!

March 19, 2018 tamilsamayam.com

ஜோத்பூர் – பாலி சாலையில் 45-வது கிலோ மீட்டரில் இருக்கிறது ‘ஓம் பனா மந்திர்’ என அழைக்கப்படும் புல்லட் பாபா கோயில். இந்தக் கோயிலின் திறந்தவெளி மூலஸ்தானத்தில் உயரமான மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது ஓம் பனாவின் மார்பளவு மார்பிள் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே அவரது போட்டோவும் வைக்கப்பட்டு பூக்களும் மாலைகளும் குவிக்கப்பட்டுள்ளன.மேடை முன்பாக அமர்ந்திருக்கும் பூசாரி, பக்தர்கள் கொடுக்கும் கொப்பரைத் தேங்காய், ஊதுபத்தி மற்றும் பூ மாலைகளை வாங்கி பூஜை களை செய்து கொண்டிருக்கிறார். இந்த மேடையின் பின்பகுதியில் கண்ணாடிக் கூண்டுக்குள், 1985-ம் வருடத்திய மாடல் (RNJ 7773) ராயல் என்ஃபீல்டு 350 சி.சி புல்லட் பைக் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஓம் பனா..?

டிசம்பர் 1988 நள்ளிரவு. இந்த பாலி நெடுஞ்சாலையில் ஒரு புல்லட் சென்று கொண்டிருந்தது. அதை ஓட்டி வந்த ஓம் சிங் ராத்தோர் எனும் 26 வயது இளைஞர், அருகிலுள்ள தனது ஜோட்டிலா கிராமத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது புல்லட் மண் ரோட்டில் இறங்கியதால் திடீர் என சறுக்கி, அங்கிருந்த மரத்தில் மோதியது. ஓம் சிங், அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்திருக்கிறார். விழுந்த வேகத்தில் அவரது தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.வழக்குப் பதிவு செய்த போலீசார், பைக்கை காவல் நிலையம் கொண்டு சென்றனர்.’காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப் பட்டிருந்த புல்லட் திடீர் என ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்டிருக்கிறது. அதை யாரோ திருட முயல்கிறார்கள் என வெளியில் வந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காரணம், புல்லட் ஸ்டாண்ட் போட்டபடி இருக்க, இன்ஜின் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. அருகில் யாரும் இல்லை. இதைப் பார்த்து பயந்து போனவர்களுக்கு, மறுநாளும் அதேபோல் இந்த புல்லட் ஸ்டார்ட் ஆகி அதிர்ச்சி அளித்திருக்கிறது.பிறகு ஓம் சிங் ராத்தோரின் வீட்டாரை அழைத்து புல்லட்டைக் கொடுத்து அனுப்பி விட்டனர். ஓம் பனாவின் வீட்டிலும் அதேபோல் இரவு நேரத்தில் புல்லட் தானாகவே ஸ்டார்ட் ஆனது. இது எப்படி என அவரது வீட்டார் குழம்பிக் கொண்டிருக்க, ஓம் பனாவின் பாட்டியின் கனவில் அவர் வந்து, ‘எனக்காக விபத்து நடந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டி விடுங்கள். சரியாகப் போய்விடும்’ எனக் கூறினாராம்.

இதைக் கேள்விப்பட்ட ஜோட்டிலா கிராமத்தினர், அந்த புல்லட்டை – விபத்து நடந்த மரத்தின் அருகில் நிறுத்தி, ‘ஓம் பனா மந்திர்’ என அதை ஒரு கோயிலாக்கி விட்டனர். வருடம் ஒரு முறை அந்த புல்லட்டை ஓம் பனாவின் கிராமம் வரை ஊர்வலமாகக் கொண்டு சென்று நடத்தப்படும் திருவிழாவில், ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒரு காலத்தில் வெறிச்சோடிக் கிடந்த இந்தப் பகுதி, புல்லட் கோயில் வந்த பின் மிகவும் புகழ் பெற்று ஒரு ‘லேண்ட் மார்க்’ போல் ஆகி விட்டது.

 

மேலும் படிக்க