March 21, 2018 findmytemple.com
சுவாமி : ஸ்ரீ வரதராஜ பெருமாள்.
தலச்சிறப்பு : பெருமாளுக்கு சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் அடையலாம்.நவக்கிரகங்களில்,சனிபகவானை ஆயுள்காரகன் என்பர்.
சனிபகவானின் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், பெருமாள் சனிபகவானைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர்.சனிக்கு அதிபதி பெருமாள். எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று.
சனிக்கிழமை விரதம் எளிமையானது.பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு,இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம்.மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம் ஆகும்.இதுவரை விரதம் இருக்காதவர்கள்,புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம் என்பது நம்பிக்கை.உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய சிறந்த பலனை தரும்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில்,கீழகொருக்கை, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.