April 20, 2018
findmytemple.com
சுவாமி:ஆம்ரவனேஸ்வரர்.
அம்பாள்:பாலாம்பிகை.
தீர்த்தம்:காவேரி.
தலவிருட்சம்:மாமரம்.
தலச்சிறப்பு:திருவண்ணாமலையில் சிவனின் அடிமுடியை கண்டுவிட்டதாக பொய் கூறிய பிரம்மாவின் சாபத்தை நீக்கிய ஸ்தலம்.மிருகண்டு முனிவர் கடுமையான தவம் செய்து உத்தம குணம் பொருந்திய புதல்வன் மார்கண்டேயனை பெற்ற இடம் மார்கண்டேயன் 16 வயது அடைந்ததும் மரண பயம் இல்லாமல் இருக்க தவம் செய்த ஸ்தலமாகும். மூலம் நட்சரத்திற்குரிய திருக்கோவில்.
மூல நட்சத்திரம் உடையவர்கள் அர்ச்சித்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி திருமணம் கைகூடும்.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சுவாமி மீது பரப்பி பூஜை செய்வது சிறப்பு.மாமரங்கள் நிறைந்திருந்த தலம் என்பதாலும், மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் “மாந்துறை” என வழங்கப்படுகிறது.