January 28, 2017 findmytemple.com
சுவாமி : ஆதிநாதன் பொலிந்து நின்ற பிரான், நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுகமண்டலம்.
அம்பாள் : ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி (தாயார்களுக்கு தனித்தனி சன்னதி).
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம், திருசங்கண்ணி துறை.
விமானம் : கோவிந்தவிமானம்.
தலவிருட்சம் :
புளியமரம் (உறங்கா புளி – இது இக்கோவிலின் தலவிருட்சம், இப்புளியமரத்தின் இலைகள் இரவில் மூடிக்கொள்வதில்லை. நம்மாழ்வார் சன்னதிக்கு மேல்மாடத்தில் உள்ளது).
தல வரலாறு :
ஒரு சமயம் திருமாலிடம் பிரம்மா தான் தவமிருக்க இடம் கூறுமாறு வேண்ட திருமால் உன்னை படைப்பதற்கு முன்பே தாமிரபரணி நதிக்கரையில் யாம் எழுந்தருளி உள்ளோம் என்று கூறினார். ஆதியிலே தோன்றிய நாதன் என்பதால் ஆதி நாதன், ஆதிபிரான் என திருநாமம் கொண்டார். திருமாலே பிரம்மனுக்கு குருவாக காட்டிய இடமாகியதால் குருகூர் என வழங்கப்படுகின்றது. இங்கு ஆற்றில் வந்த சங்கு இப்பெருமானை வழிபட்டு மோட்சம் பெற்றதால் சங்கின் வேறு பெயர் குருகூ. குருகூ மோட்சம் பெற்ற தலம் குருஊரு. குருகூர் என்றும் கொள்ளலாம். சங்குமோட்சம் பெற்ற தலம் இன்றும் திருச்சங்கண்ணி துறை என்று கூறுகின்றனர்.
சாலக்கிராமத்தில் மந்தன் என்ற அந்தணச் சிறுவன் வேதம் படிக்கும் காலத்தில் அதை சரியாக படிக்காமலும் வேதத்தை இகழ்ந்து பேசியும் வந்தான். இதனால் கோபமுற்ற குரு அவனை ஈழிகுலத்தில் பிறக்க சபித்தார். அவனும் படிப்பதை நிறுத்திவிட்டு திருமால் ஸ்தலங்களின் ஆலய துப்புரவு பணிகளில் ஈடுபட்டு தன் காலங்கடந்தான் மறு பிறவியில் தாந்தன் என்னும் பெயரில் கீழ்குலத்தில் பிறந்த ஒழுக்கத்தில் சிறந்தவனாக விளங்கினான். பின்னர் குருகூர் திருச்சங்கண்ணி துறைக்கு வந்து ஆதிநாதனை வழிபட்டு வந்தான்.
அங்கே இருந்தவர்கள் இவனை வெறுத்து ஒதுக்க அவன் கிழக்கே சென்று மறுகரையில் ஆதிபிரானை மணலில் அமைத்து வழிப்பட்டான். திடீரென தாந்தனை ஒதுக்கியவர்களுக்கு கண் தெரியாமல் போகவே அவர்கள் பெருமாளை சரணடைய அசரீரியாய் நாங்கள் தாந்தனை ஒதுக்கியதற்கு தண்டனை என்று கூற அவர்கள் அவன் இருப்பிடம் சென்று மன்னித்தருள வேண்டியபின் கண்ணொளி பெற்றனர். பெருமாளும் தாயாரோடு காட்சி கொடுத்து தாந்தனை தன்னுடன் இணைத்துக் கொண்டார். இதனால் தாந்த ஷேத்ரம் என கூறுகின்றனர்.
பிற்காலத்தில் தாந்தன் தங்கிய ஆலமரத்தில் முன்பு ஒரு முறை தங்கிய வேடன் ஒருவன் மறு பிறவியில் சங்கன் என்னும் முனிவராக கடுந்தவம் கொள்கையில் நாரதமுனி அவனிடத்தில் தவத்திற்கான காரணம் கேட்க அவன் மோட்சம் வேண்டும் என்று கூற அவரும் குருகூர் சென்று பெருமாளை வேண்டுமென அறிவுறுத்த முனிவரும் சங்காக மாறி குருகூர் சென்று பெருமாளை வேண்ட பெருமாள் காட்சி அளித்து மோட்சம் அளித்தார். அந்த இடம் தான் இன்றும் திருச்சங்கண்ணி துறை என்று அழைக்கப்படுகறது.
இங்கு இருக்கும் புளியமரம் இலக்குமனன் எனப்டுகிறது. ஆதிசேனாக இலக்குமனன் இருப்பதால் சேத்திரம் எனவும். வராஹ அவதாரம் காண முனிவர்கள் இத்தலத்தில் தவமிருந்து அவர்களுக்கு பிராட்டியுடன் வராஹ நாராயணன் காட்சியளித்ததால் வராஹசேத்திரம் எனவும் நாய்க்கும் மோட்சம் அளித்த தீர்த்தகரை என்பதால் தீர்த்த ஷேத்திரம் எனவும் பஞ்ச முஹா ஷேத்திரம் என்றும் கூறுவர். நம்மாழ்வார் குழந்தையாக தவழ்ந்த புளியமரத்தில் இன்றும் குழந்தையின் உருவம் உள்ளது.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை எழுத நினைத்த நாதமுனிகள், மதுரகவி வம்சத்தினரிடம் கண்ணி நுண் சிறுத்தாம்பு பெற்று அதை பலாயிரம் முறை ஜெபிக்க நம்மாழ்வார் நேரில் வந்து அருள நாரதமுனிஅவற்றை எழுதினார் என்று கூறப்படுகிறது. இங்குள்ள ஆதிபிரான் சுயம்பு உருவம் கால்கள் பூமியுள் இருப்பதாக ஐதீகம். நம்மாழ்வார் மூல வடிவம் தாமிரபரணி நீரை காய்ச்சி அதில் மதுரகவி தன் சக்திகளை பிரையோகித்து உருவாக்கிய சிற்பம் கைப்படாத சிற்பம் என்று கூறப்படுகிறது.
நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.
கோயில் முகவரி : அருள்மிகு ஆதிநாத பெருமாள் திருக்கோவில்,ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி மாவட்டம்.