April 14, 2017 findmytemple.com
சுவாமி : அருள்மிகு ஜெகன்னாதப் பெருமாள்.
அம்பாள் : அருள்மிகு செண்பகவல்லித் தாயார்.
மூர்த்தி : சீனிவாசப் பெருமாள்.
தீர்த்தம் : நந்தி புஷ்கரணி.
தலவிருட்சம் : செண்பக மரம்.
தலச்சிறப்பு : 108 திவ்ய தேசங்களில் 21-வது திவ்ய தேசமாகும். நந்திகேஸ்வரர் மகாவிஷ்ணுவைக் காண வைகுண்டத்திற்கு வந்த போது துவாரபாலகர்கள் தடுத்தனர். அனுமதி பெறாமல் செல்ல முயன்ற நந்தியை உடம்பில் வெப்பத்தால் எறிய சாபமிட்டனர். சாபவிமோசனம் வேண்டி, செண்பகாரண்யத்தில் நந்தி மகாவிஷ்ணுவைக் குறித்து தவமிருந்து விமோசனம் பெற்றார். வேண்டிய வரம் கேள் என மகாவிஷ்ணு சொல்ல, இத்தலம் எனது பெயரிலேயே விளங்க வேண்டும் என அவர் கேட்க, இத்தலம் “நந்திபுர விண்ணகர” மாயிற்று. இது மேற்கு நோக்கிய தலமாகும்.
வழிபட்டோர் : சோழ மன்னன், சிபி சக்கரவர்த்தி, நந்தியம்பெருமான்.
பாடியோர் : திருமங்கையாழ்வார்.
நடைதிறப்பு : காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
பூஜை விவரம் : மூன்று கால பூஜை.
திருவிழாக்கள் :
வைகாசி – விசாகம் பிரமோற்சவம்,
தை –அத்யான உற்சவம் ஏகாதசி தாயார் / மூலவர் திருநட்சத்திரத்தில் திருமஞ்சனம்.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு ஜெகன்னாதப் பெருமாள் திருக்கோவில்,முழையூர் வழி, பட்டீஸ்வரம் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.