May 12, 2017 findmytemple.com
சுவாமி : லட்சுமிநாராயணி
தலச்சிறப்பு :
இக்கோவில் தென் இந்தியாவின் பொற்கோவில்(தங்ககோவில்) என அழைக்கப்படுவது சிறப்பு.மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு :
இந்தியாவில் முழுவதும் தங்கத்தால் ஆன இரண்டாவது கோயில் என்கிறார்கள்.முதலாவது – அனைவருக்கும் தெரிந்த பஞ்சாப் பொற் கோயில்.இக்கோயில் 5ஆயிரம் சதுர அடிபரப்பளவும் தங்கத்தால் இழைக்கப்பட்டு தங்க கோயிலாக விளங்குகிறது. இக்கோயில் 1500 கிலோ தங்கத்தில், ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.தங்க கோயிலில் உள்ள கடவுள் “நாராயணி அம்மன்”. முதலில் இங்கு பழைய கோயில் இருந்திருக்கிறது. பின் பக்கத்தில் இந்த தங்க கோயில் கட்டப்பட்டுள்ளது.பொற்கோயிலின் எதிரே ரோட்டைக் கடந்து சென்றால், ஒரு குடிசைக்குள் சுயம்பு நாராயணியும், இதை ஒட்டிய கற்கோயிலில் மற்றொரு நாராயணியும் அருள்செய்கின்றனர். இந்தக் கோயிலை “நாராயணி பீடம்’ என்கின்றனர். இந்த பீடத்தில், கோயிலின் நிறுவனரான “சக்திஅம்மா’ இருக்கிறார். மக்கள் இவரிடம் ஆசிபெறச் செல்கின்றனர். இங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மதியமும், இரவும் உணவு வழங்கப்படுகிறது.
நடைதிறப்பு : காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள நகரம் : வேலூர்
கோயில் முகவரி : அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோவில், ஸ்ரீபுரம் – திருமலைக்கோடி,வேலூர் மாவட்டம்.