• Download mobile app
03 Dec 2024, TuesdayEdition - 3219
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோவில்

November 8, 2018 findmytemple.com

சுவாமி : அருள்மிகு மகாலிங்க சுவாமி.

அம்பாள் : அருள்மிகு பிருகத் சுந்தர குஜாம்பிகை ( பெருமாமலைப் பிராட்டி).

மூர்த்தி : ஆண்ட விநாயகர், ஆறுமுகர், தெட்சிணா மூர்த்தி, நடராஜர், பஞ்சமூர்த்திகள், 27 நட்சத்திர லிங்கங்கள், பட்டினத்தார், பர்த்ருகிரி, மூகாம்பிகை.

தீர்த்தம் : காருண்யாமிர்த தீர்த்தம்.

தலவிருட்சம் : மருத மரம்.

தலச்சிறப்பு :

இத்தலம் மகாலிங்கத் தலம் எனவும் இதனைச் சுற்றியுள்ள ஒன்பது தலங்களை இதன் பரிவாரத் தலங்கள் என்றும் சொல்வர். 1. விநாயகர் – திரு வலஞ்சுழி, 2. முருகன் – சுவாமி மலை, 3. நடராசர் – தில்லை, 4. நவக்கிரகம் – சூரியனார், 5. தெட்சிணாமூர்த்தி – ஆலங்குடி, 6. பைரவர் – சீர்காழி, 7. நந்தி – திருவாவடுதுறை, 8. சோமாஸ்கந்தர் – திருவாருர், 9. சண்டேஸ்வரர் – திருச்சேய்ஞலூர். மனநோயும் பிரமகத்தி முதலிய தோஷங்களும் இத்தலத்தை வழிபட்டால் விலகும்.

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்து விட்டான். இந்த சம்பவம் அவனை அறியாமல் நடந்து இருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.

மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான்.

அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றி இருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின் பற்றி கோவிலினுள் செல்ல தைரியம் இன்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில்வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுர வாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

வழிபட்டோர் : உமையவள், விநாயகர், முருகன், திருமால், லெட்சுமி, கலைமகள், வேதம், வசிஷ்டர், உரமோசமுனிவர், கபிலர், அகத்தியர், பட்டினத்தார்.

பாடியோர் : திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர்.

நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

பூஜை விவரம் : ஆறு கால பூஜை.

திருவிழாக்கள் :

தைபூசம்,

விசாகப் பெருவிழா,

திருவாதிரை,

நவராத்திரி,

அன்னாபிஷேகம்,

கந்தசஷ்டி,

ஆடிபூரம்,

கார்த்திகை மாத சோமவாரம்,

பௌர்ணமி மகாமேரு அபிஷேகம்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோவில்,திருவிடைமருதூர் அஞ்சல் – 612 104, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.

மேலும் படிக்க