• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

March 24, 2017 findmytemple.com

சுவாமி : மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்

அம்பாள் : மீனாட்சி, அங்கயற்கண்ணி

தீர்த்தம் : பொற்றாமரைக்குளம், வைகை, தெப்பக்குளம்,

தலவிருட்சம் : கடம்ப மரம்

தலச்சிறப்பு :

தமிழ் சங்கங்கள் பிறந்த இடம் மதுரை ஆகும். தமிழ்வளர்த்த தென்பாண்டி நாட்டின் தலைநகர், அங்கயர் கன்னியுடன் கோயில் கொண்ட எழில்நகர், “மதுரை”யின் மையப்பகுதியில் மீனாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக ஆயிரங்கால்மண்டபம், கிளிக்கூண்டுமண்டபம், ஊஞ்சல்மண்டபம், புதுமண்டபம், உயர்ந்தகோபுரங்கள் திகழ்கின்றன. இக்கோவிலுக்கு ஐந்து நுழைவாயில்கள் உள்ளது. இது 847 அடி, 792 அடி நீள அகலங்களோடு மிக பிரமாண்டமான கோவிலாக காட்சி அளிக்கிறது. நான்கு ராஜகோபுரங்களோடு மொத்தம் பதினான்கு கோபுரங்கள் உள்ளது. வெளிநாட்டவரும் அதிகஅளவில் இத்திருக்கோவில் வந்து வியந்து வணங்கி வருகின்றனர்.

கிழக்கு வாசலின் அருகே உள்ள அம்மன் சந்நிதியில் உள்ள மண்டபம் திருமலை நாயக்கரின் மனைவிகளால் கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் மதுரையை 17th நுற்றாண்டில் ஆட்சி புரிந்து இருக்கின்றார். பார்வதி தேவியின் எட்டு அவதாரங்களான கருமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, யக்னரூபிணி, ஷ்யாமளா, மகேஸ்வரி, மற்றும் மனோன்மணி ஆகிய உருவங்கள் சிலைகளாக வடிவைக்க்மப்பட்டுள்ளது.

மீனாட்சியின் வரலாறு :

ஓவியமாக மண்டபத்தில் மேற்கூரையில் வரையப்பட்டுள்ளது. மேலும் சில ஓவியங்கள் திருவிளையாடல் நிகழ்வுகள் அனைத்தையும் குறிப்பதாக உள்ளது. இது நாயக்கர் காலத்து ஓவியம் ஆகும். பொற்றாமரை குளத்தில் வடக்கே உள்ள சுவரில் 64 வகையான சிவனின் திருவிளையாடல்கள் வரையப்பட்டுள்ளது.

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் சுயம்பு ஆக இருந்த ஒரு லிங்கத்தை தேவர்களின் தலைவன் இந்திரன் கதம்பவனத்தில் கண்டான். பின் அந்த சிலையை இந்திரன் மதுரையில் பிரதிஷ்டை செய்தான். அதனாலேயே இங்கு சிவன் இந்திரனின் வாகனத்தில் உள்ளார். வரலாற்று சான்றுகளின் படி இக்கோவில் பல நுறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருப்பினும் கிபி ௧௩௧௦ ஆண்டு மாலிக்காபூர் என்ற இஸ்லாமிய மன்னனால் தரை மட்டமாக்கப்பட்டது. பின் 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இக்கோவில் புதியதாக கட்டப்பட்டது. திருஞானசம்பந்தர் அவர்களால் 7ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டுள்ளது.

நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை. மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை.

பூஜைவிவரம் : ஆறுகால பூஜை.

திருவிழாக்கள் : சித்திரை-புதுப்பஞ்சாங்கம் வாசித்தல், சித்திரை பெருவிழா, கற்பக விருட்ச சிம்ம வாகனத்தில் பவனி, பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் பட்டினபிரவேசம், ரத உற்சவம். வைகாசி-வசந்தஉற்சவம். ஆடி-முளைக்கொட்டு உற்சவம்-தீர்த்தவாரி. ஆவணி-ஆவணிமூலத்திருநாள்-புட்டுக்குமண்சுமந்தருளியலீலை-விருசாபாரூடுதரிசனம். புரட்டாசி-நவராத்திரி. ஐப்பசி-பவித்திர உற்சவம். கார்த்திகை-கோலாட்டஉற்சவம், கார்த்திகை 2 வதுசோமவாரம்.மார்கழி-திருப்பள்ளியெழுச்சி எண்ணைகாப்பு உற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம். தை-தைபொங்கல் கல்யானைக்கு கரும்புகொடுத்தருளல், செல்லத்தம்மன் உற்சவம், தெப்பஉற்சவது வஜாரோஹனம் கற்பகவிருட்ச, சிம்மவாகனத்தில் பவனி. மாசி-மாசிமண்டல உற்சவம். பங்குனி-கோடை வசந்த உற்சவம்.

அருகிலுள்ள நகரம் : மதுரை

கோயில்முகவரி : அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை-625 001.

மேலும் படிக்க