July 31, 2018 findmytemple.com
சுவாமி:சண்முகநாதர்
அம்பாள்:வள்ளி,தெய்வானை
தீர்த்தம்:தேனாறு
தலவிருட்சம்:அரசமரம்
தலச்சிறப்பு:குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்தது நடக்கும்.“குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது” என்ற பழமொழி தமிழகத்தில் பரவியுள்ளது.இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்தவை கை கூடியே தீரும் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது.
தல வரலாறு:ஸ்ரீசண்முகன் மயிலின்மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி உள்ளார்.வள்ளியும் தெய்வானையும் இருபுறங்களில் தனித்தனியே மயில்களில் உள்ளனர். சூரனாதியோர் தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முரனின் அன்னம்,திருமாலின் கருடன் ஆகியவை நாங்கள் தான் மயிலை விட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக பொய் சொன்னதால் மயில் கோபம் அடைந்தது.அன்னத்தையும்,கருடனையும் மயில் விழுங்கி விட்டது.இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும்,கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போக சாபம் தந்தார்.மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார்.பின் மயிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாக தோற்றத்தில் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தந்தார்.