November 20, 2017 findmytemple.com
சுவாமி : உமா மகேஸ்வரர்.
அம்பாள் : ராஜராஜேஸ்வரி.
தீர்த்தம் : சத்திய புஷ்கரணி.
தலவிருட்சம் : மூங்கில் மரம்.
தலச்சிறப்பு :
சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக இக்கோவில் ஒரே மலையில் குடைந்து சிவனும், பெருமாள் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு :
இது கி.பி. 7-ம் நூற்றாண்டு சுமார் 1300 வருடங்களுக்கு முன் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில். மகேந்திரவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. இக்கோவில் மலையை குடைந்து கட்டப்பட்ட குடைவரைக்கோயில்.
ஸ்தல விருட்சம்:
மூங்கில், இதனால் இப்பகுதி வேணுவனம் என அழைக்கபடுகிறது. அம்பாள் பெயர் வேணுவனேஸ்வரி ஆகும்.சத்யபுஷ்கரணி எனும் தீர்தத குளம் உள்ளது. சந்திரன் பூஜை பண்ணியதால் சந்திரபுஷ்கரணி என்றும் கூறப்படுகிறது அதற்கான சிற்பம் உள்ளது. இக்கோவில் இரண்டு சிவன் இரண்டு அம்பாள் உள்ளது. அவை மலைக்குள் குடைந்து சுந்தரபாண்டியன் காலத்தில் அமைக்கப்பட்டது. மகேந்திர வர்ம பல்லவர், நரசிம்ம வர்ம பல்லவர்கள் காலத்தில் அமைக்கப்பட்டது என சில கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இந்திய தொல்லியல் ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்து கீழும் உள்ளது.
கோவிலின் கட்டடக்கலை :
மகேந்திர வர்ம பல்லவர், நரசிம்ம வர்ம பல்லவர்கள் காலத்தில் அமைக்கப்பட்டது என சில கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இது கி.பி. 7-ம் நூற்றாண்டு சுமார் 1300 வருடங்களுக்கு முன் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில். மகேந்திரவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டது.
நடைதிறப்பு :
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
பூஜை விவரம் :
சித்தரை மாதம் 10 பௌர்ணமி நாட்கள் பிரம்மோட்சவம்,ஆடி மாதம் 10 நாட்கள் திருவிழா ஆடிப்பூரம் விசேசம்,பிரதோஷம்,சிவராத்திரி,கிரிவலம் விசேசமாக நடக்கும்.