October 30, 2018 findmytemple.com
சுவாமி : ஸ்ரீ ஊருடையப்பர்.
தலச்சிறப்பு :
இந்த ஊருடையப்பர் கோயில் மிகவும் கிலமாய் இருந்தது, இதை இப்பொழுது திருத்தருமை ஆதீனத்தில் 25-ம் பட்டத்தில் எழுந்தருளி அருளாட்சி நடத்தி வருபவர்களும் அருங்கலை விநோதரும் பெருங்கொடை வள்ளலுமாகிய ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அமைப்பு முறையில் முன்பு இருந்ததைப் போலத் திருப்பணி செய்துள்ளார்கள்.
தல வரலாறு :
தருமபுரம் ஆதினம் ஸ்ரீ அருணஜடேஸ்வரர் சுவாமி திருக்கோவிலை சார்ந்த கோவில் ஆகும். திருப்பானந்தாள் சாலை ஓரமாக கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடைதிறப்பு :
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : ஸ்ரீ ஊருடையப்பர் திருக்கோவில்,திருப்பனந்தாள், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612 504.