April 27, 2016 தண்டோரா குழு
தமிழக பெண்கள் பாவாடை தாவணியில் நடனமாடுவதைப் பார்த்து மெய் மறக்காதவர்களே கிடையாது.
இந்நிலையில் நவீன உடையும், நவ நாகரீகமுமாக இருக்கும் ஜப்பான் நாட்டுப் பெண்கள் பாவாடை தாவணியில்,
ஒரு துளியும் பிசிரில்லாமல் தமிழ்ப் பாடலுக்கு நடம் ஆடினால் பார்க்கவே பரவசமாக இருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.
மேலும் ஜப்பான் மொழியையும் தமிழையும் கலந்து ஒரு பாடலை பாடி ஆடும்போது அது மேலும் இனிமையை கூட்டுகிறது.
இந்த நடனத்தில் முக்கிய அம்சமே அந்த நடனமாடும் பெண்ணின் முக பாவனைதான். என்ன அருமையான ஒரு முகபாவனை. பாடலின் பொருளைப் புரிந்துகொண்ட கொடுத்த முகபாவனை அனைவரையும் கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அதைப் போன்ற ஒரு நடனம் தான் தற்போது விரல் வீடியோவில் நான் காணப் போகிறோம்………………….