March 25, 2016 வெங்கி சதீஷ்
பொதுவாக நாம் செல்லும் வழியில் ஒரு சிறு கல் இருந்து அதன்மீது வாகனத்தை ஏற்றினாலே அதிர்ச்சியடையும் நாம் பேருந்தின் மீது பெரிய பெரிய பாறைகள் வந்து விழுவதைப் பார்த்தால் எப்படியிருக்கும். அப்படி ஒரு நிகழ்ச்சி சைனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் காரகோரம் நெடுஞ்சாலையில் நடைபெற்றது. பேருந்துகள் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பாறைகள் உருண்டு விழத்துவங்கின. இதையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறிய பிறகும் ஒரு சிலர் மட்டும் பேருந்துக்கு பின் மாட்டிக்கொண்டனர். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமின்றி அனைவரும் தப்பினர். ஆனாலும் அந்த வீடியோவை பார்க்கும் போது மனம் பதறுவதை தடுக்க முடியவில்லை.