March 31, 2016 வெங்கி சதீஷ்
உலகில் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு திறமைகள் குறித்த போட்டிகள் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. அதில் பல்வேறு திறமைசாலிகள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்துவர். அதில் பலர் ஆரம்பம் முதலே திறமையை வெளிப்படுத்துவர்.
சிலர் இறுதியில் தான் திறமை வெளிப்படும். அப்படி இரண்டாவது வகையைச் சேர்ந்த ஒருவர் ஓவியம் வரையப்போவதாக அறிவித்துள்ளார். பின்னர் நீண்ட நேரம் ஒரு பலகையில் என்னென்னவோ செய்தவர் இறுதிவரை ஒன்றையுமே பலகையில் காணவில்லை என்பதால் நடுவர்கள் ஒவ்வொருவராக விரக்தியடைந்து அவருக்குச் சிகப்பு சிக்னல் கொடுத்தனர்.
இறுதியாக முப்பது வினாடிகள் இருக்கும் பொது அந்த பலகையைத் திருப்பி அதன் மீது ஒரு பொடியைப் போட்ட மறு வினாடி அதில் அப்ரகாம் லிங்கன் உருவம் தெரிந்ததை அடுத்து அனைத்து நடுவர்களும் எழுந்து நின்று கைதட்டியதோடு மீண்டும் அவரது திறமையை அங்கீகரித்தனர். இதை தற்போது வீடியோவில் காண்போம்…………..